ஓர் இருட்டு அறையில் நான்கு மெழுகுவர்த்திகள் ரம்மியமான அழகோடு ஒளிவீசி கொண்டிருந்தன. சற்று நேரம் சென்றதும் அந்த நான்கில் மூன்று பேச ஆரம்பித்தன.
முதல் மெழுகுவர்த்தி "அமைதி" :
இவ்வுலகில் அமைதி என்கிற நான் இல்லை. எங்கு பார்த்தாலும் சண்டை,வன்முறை, தீவிரவாதம்,கடன் என இருக்கின்றன.அப்படிப்பட்ட உலகில் நான் வசிக்க விரும்பவில்லை என்றவாறு அணைந்துபோனது.
இரண்டாவது மெழுகுவத்தி "உண்மை":
இவ்வுலகில் உண்மை என்கிற நான் இல்லை. எங்கு பார்த்தாலும் பொய்,குழு சண்டை,தேர்தல் வாக்குறுதி, இலவசம் என்றே இருக்கின்றன.அதனால் இங்கு வசிக்க விரும்பவில்லை என்றவாறு அணைந்துபோனது.
மூன்றாவது மெழுகுவத்தி "அன்பு":
இவ்வுலகில் அன்பு என்கிற நான் இல்லை. எங்கு பார்த்தாலும் என்றே பணம்,சுயநலம்,அடிதடி என்பதே பிரதானமாக இருக்கின்றன.நீங்கள் இருவர் மட்டுமின்றி நானும் அணைந்து போனால்தான் இம்மக்களுக்கு புத்தி வரும்,அறியாமை என்கிற இருளில் கஷ்டபடட்டும் என்றபடி தன்னை அணைத்துக்கொண்டது.
இந்த மூன்றும் அணைந்த நிலையில் ஒரு மழலை அந்த அறைக்கு வந்து,அணைந்திருந்த அந்த மூன்று மெழுகுவர்த்திகளை பார்த்தபடி எரிந்து கொண்டிருந்த நான்காவது திரியிடம் சென்றது.மூவரும் ஏன் இப்படி அணைந்தனர் என வினவியது.
நான்காவது மெழுவர்த்தி "நம்பிக்கை":கவலைப்படாதே! நம்பிக்கை என்கிற நான் விடாமுயற்சியுடன் எரிந்து கொண்டிருக்கிறேன்.அணைய மாட்டேன்.அணைந்து போன அமைதி,உண்மை,அன்பு இவற்றை நம்பிக்கை என்கிற என்னை கொண்டு நீ மறுபடியும் ஏற்ற முடியும்.நீ செய்வாயா என்றது.
இதை கேட்ட அந்த மழலை தன் பிஞ்சு கரங்களால் நம்பிக்கை ஒளி கொண்டு மற்ற மூன்றையும் ஏற்ற ஆரம்பித்தது. அறை முழுதும் பிரகாசமானது.
அமைதி,உண்மை,அன்பு மூன்றும் பெரிதுதான் என்றாலும் நம்பிக்கை என்ற ஒளி கொண்டு தான் அடைய முடியும் என்பதை அந்த மழலை உணர்ந்தது. நாம் எப்போது உணர போகிறோம்?

