بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
96:1 اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ
96:1. (யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திருநாமத்தைக் கொண்டு ஓதுவீராக.
96:2 خَلَقَ الْإِنسَانَ مِنْ عَلَقٍ
96:2. “அலக்” என்ற நிலையிலிருந்து மனிதனை படைத்தான்.
96:3 اقْرَأْ وَرَبُّكَ الْأَكْرَمُ
96:3. ஓதுவீராக: உம் இறைவன் மாபெரும் கொடையாளி.
96:4 الَّذِي عَلَّمَ بِالْقَلَمِ
96:4. அவனே எழுதுகோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான்.
96:5 عَلَّمَ الْإِنسَانَ مَا لَمْ يَعْلَمْ
96:5. மனிதனுக்கு அவன் அறியாதவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான்.
96:6 كَلَّا إِنَّ الْإِنسَانَ لَيَطْغَىٰ
96:6. எனினும் நிச்சயமாக மனிதன் வரம்பு மீறுகிறான்.
வல்ல இறைவன் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு வழங்கிய முதல் வசனமே மேற்கண்ட வசனம். அதில் அல்லாஹ் ஜிப்ரயீல் (அலை) அவர்களின் மூலம் “ஓதுவீராக“ என்றே ஆரம்பிக்கிறான்.
நாம் அனைவரும் ஓதவும், ஓத வைக்கவும் வேண்டிய சமுதாயத்தினர்.
“ஒருவர் ஓர் அறிவைத் தேடி ஒரு பாதையில் சென்றால், அல்லாஹ் அதனைக் கொண்டு அவருக்கு சுவனம் செல்லும் ஒரு பாதையை இலகுபடுத்திக் கொடுக்கின்றான்'‘ என்று எம்பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
‘’அறிவு ஒரு முஸ்லிமைப் பொறுத்தவரை காணாமல் போன ஒரு சொத்து. அவர் அது கிடைக்குமிடமெல்லாம் சென்று ஆவலுடன் சேகரித்துக் கொள்ளவேண்டும்’‘ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி)
அன்பான சகோதர /சகோதரிகளுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
நமது இந்தியாவில் கடந்த 1947 முதல் 1992 வரை நடந்த இனப்படுகொலைகளின் எண்ணிக்கை 13,316.
இந்தப் படுகொலைகள் அனைத்திலும் அதிகமாக உயிர் இழப்பும், பொருள் இழப்பும், பாதிப்பும், வழக்குகளும், சிறைத் தண்டனைகளும், தேசத் துரோகக் குற்றச்சாட்டுகளும் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் மேல் நடந்து இருப்பதாக அரசாங்கத்தின் ஆய்வு தெரிவிக்கின்றது.
இந்த நிகழ்வுகளை நடுநிலையான பத்திரிகைகளும் இருட்டடிப்பு செய்தன. அந்தத் தருணத்தில் நமது சமுதாயத்தின் இந்த அவல நிலையை நமது சமுதாயத்திற்கு தந்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக சில சகோதரர்களால் கடந்த 1992 முதல் கையழுத்துப் பிரதியாக விடியல் வெள்ளி என்ற பத்திரிகை சில நூறு பிரதிகளாக ஆரம்பிக்கப்பட்டது. 1996ம் வருடம் மே மாதம் இது முதல் அச்சுப் பதிப்பாக வெளிவந்தது. 2000ம் வருடம் டிசம்பர் முதல் அட்டைப்படம் நான்கு வண்ண நிறத்தில் வெளிவந்தது. இப்படி படிப்படியாக வளர்ச்சி பெற்று இன்று 25,000 பிரதிகளாக பல்வேறு நாடுகளுக்கும், கண்டங்களுக்கும் சென்றுகொண்டு இருக்கின்றது விடியல் வெள்ளி மாத இதழ். அல்ஹம்துலில்லாஹ்.
Journalism படித்தவர்கள் மட்டுமே கோலோச்சிய கடந்த காலங்களில், பொறியாளர்களும், தொழிற்பயிற்சி முடித்தவர்களும், மேல்நிலைக் கல்வி பயின்றவர்களும் இன்று அருமையான படைப்புகளை அழகுற தருகின்றனர். உலக நிகழ்வுகளை உடனடியாகத் தெரிவிக்கின்றனர். அடக்குமுறைகள், அநீதிகள் எங்காவது நடந்தால் நேரடியாகச்
